ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் 
உலகம்

ஆங்கில புத்தாண்டு 2022 பிறந்தது, உலகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்

ஆங்கில புத்தாண்டு பிறந்ததை நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரம் முதலில் வரவேற்றது.

மாலை மலர்

2021 ஆம் ஆண்டு முடிந்து 2022 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருந்த போதிலும் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாட்டங்கள் களை கட்டின.

நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலையிலேயே புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது. நகரமே வண்ணமயமாக காட்சியளித்தது.
#WATCH | New Zealand's Auckland rings in #NewYear2022 with fireworks display

#WATCH Australia welcomes the new year 2022 with spectacular fireworks at Sydney Harbour

#WATCH | North Korea welcomes #NewYear2022 with a firework display near the Taedong River

2022-ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.