உலகம்

வான்ஸ்-க்கு வந்த அந்த போன் கால்.. பேச்சுவார்த்தையை பாதியில் குலைத்த நேதன்யாகு - ஈரான் சொல்கிறது

அணு ஆயுத தயாரிப்பு, யுரேனியம் செறிவூட்டலை கவிடுதல், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு தொடர்பாக ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்காததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழு நேற்று முன் தினம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.

21 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை முடிவில் எனது முடிவும் எட்டப்படவில்லை.

அணு ஆயுத தயாரிப்பு, யுரேனியம் செறிவூட்டலை கவிடுதல், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு தொடர்பாக ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்காததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்விக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பேச்சுவார்த்தையின் நடுவில் வேன்ஸை நேதன்யாகு தொலைபேசியில் அழைத்து பேசியது, அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பி இஸ்ரேலின் நலன்களை நோக்கிச் செல்ல வைத்தது.

போரின் மூலம் அடைய முடியாததை, பேச்சுவார்த்தைகள் மூலம் அடைய அமெரிக்கா முயன்றது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டதாகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தொலைபேசி அழைப்பு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு வாஷிங்டன் மற்றும் ஜெருசலேம் இன்னும் பதிலளிக்கவில்லை.

பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்ததாக முன்னதாக ஈரான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.