தாய்லாந்தின் தெற்கு நரதிவாத் மாகாணத்தில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் பைப் வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பாதுகாப்புப் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு 10 வயது சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
முதல் கட்ட விசாரணையில், சுமார் 10 பேர் கொண்ட கும்பல் பிக்கப் வாகனத்தில் வந்து துப்பாக்கியால் சுட்டும், பைப் குண்டுகளை வீசியும் தாக்குதலை நடத்தியது தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.