உலகம்

சனி கோளின் தென் துருவத்தில் 10 பக்க அலை வடிவிலான காட்சி: விஞ்ஞானிகள்

சனி கிரகத்தின் தென் துருவத்தில் 10 பக்க அலை வடிவத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சனி கோளின் தென் துருவத்தில் 10 பக்க (decagon) அலை வடிவத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சனி கோளின் தென் துருவத்தில் 10 பக்க (decagon) அலை வடிவத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வடிவம் நாசாவின் இரட்டை வாயேஜர் விண்கலங்களால் 1980களில் பிரபஞ்சத்தை ஆய்வு செய்ய உளவு பார்க்கப்பட்ட, சனி கோளின் வட துருவத்தை சுற்றியுள்ள மேகங்களின் ஆறு பக்கங்கள் கொண்ட (hexagon) கோணத்தை விட பெரியதாக இருந்தாக கண்டறிந்துள்ளனர்.

மேலும் சுழலும் இதன் தசமகோணம் (10 பக்க கோணம்) இன்னும் பெரியதாகவும், மேலும் நிலையற்றதாகவும் தோன்றுவதாக ஸ்பெயின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சனி கோள்

சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய கோளாகவும், சூரியனில் இருந்து ஆறாவது பெரிய கோளாகவும் சனி (saturn) கோள் உள்ளது.

இந்த கோளானது சூரிய மண்டலத்தில் மிக குறைந்த அடர்த்தி கொண்டதாகவும், இதன் அடர்த்தி நீரை விட குறைவாகவும் உள்ளது. இதன் காரணமாக சூரிய மண்டலத்தில் மிதந்து கொண்டு வருகிறது.

சனி கோளின் தென் துருவத்தில் காணப்படும் இந்த புதிய ஜெட் நீரோட்ட அமைப்பு 2023-ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொலைநோக்கியான, ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் பார்வையில் தென்பட்டது.

இதையடுத்து 2017 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சனி கோளின் தென் துருவம் பூமியில் இருந்து சற்று விலகி சாய்ந்திருந்ததால், இந்த விசித்திரமான வளிமண்டல நிகழ்வு உருவாகி இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா முதன்மை ஆய்வாளர்

இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து நாசாவின் கோடார்ட் விண்வெளி பறப்பு மையத்தின் ஓபால் (OPAL) முதன்மை ஆய்வாளரான ஏமி சைமன் கூறுகையில், சனி கிரகத்தின் தென் அரைக்கோளத்தில் இது போன்ற ஒன்றை தாங்கள் இதுவரை கண்டதில்லை என தெரிவித்தார்.

மேலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் பார்த்த ஒவ்வொரு முறையும், அந்த வட அரைக்கோளம் அங்கேயே இருந்ததாகவும், இந்த வடிவம் வித்தியாசமான முறையில் வலுப்பெற்றது போல் தோற்றமளிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த புதிய வடிவம் இன்னும் உருவாகி கொண்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், ஏனென்றால் பத்து பக்கங்கள் கொண்ட ஒரு பக்கம் மட்டும் ஏற்கனவே சுமார் 16,000 கிலோ மீட்டரை தாண்டி விட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT