உலகம்

அமெரிக்காவில் Pizza டெலிவரி செய்ய சென்ற தெலுங்கானா இளைஞர் சுட்டுக் கொலை

அவர் திட்டமிட்டு வரவழைப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசார் சந்தேகின்றனர்.

தெலுங்கானாவின் மேட்சல் மாவட்டம், குண்ட்லபோச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் அன்ஷுல் குஞ்சா.

கடந்த 2023-ஆம் ஆண்டு எம்பிஏ படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

படிப்பு முடிந்து பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், கூடுதல் வருமானத்திற்காக வார இறுதி நாட்களில் பிட்சா டெலிவரி செய்யும் வேலையையும் செய்து வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு பிட்சா டெலிவரி செய்யுமாறு அன்ஷுலுக்கு ஒரு போலி ஆர்டர் வந்துள்ளது.

அவர் ஆள்நடமாட்டமில்லாத அந்த இடத்திற்கு சென்றபோது, முகமூடி அணிந்த இருவர் அன்ஷுலை மிக அருகில் இருந்து அவரது தலையில் பலமுறை சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அன்ஷுலிடமிருந்து பணம், செல்போன் அல்லது நகை என எதுவும் திருடப்படவில்லை.

எனவே அவர் திட்டமிட்டு வரவழைப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசார் சந்தேகின்றனர்.

முன்பொருமுறை அன்ஷுலிடம் இருந்து தங்கச் சங்கிலி, பணம் பறிக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அன்ஷுலின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.