உலகம்

பூமியில் உங்களுக்கு எது மிகவும் பிடிக்கும்?- விண்வெளி நிலையத்தில் இருந்து பேசிய வீரரிடம் கேள்வி கேட்ட மகன்

விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது மகனுடன் பேசி உள்ளார்.விண்வெளியில் நான் விரும்பும் சிறந்த விஷயம் என்ன என்று கேட்கிறீர்கள்.

மாலை மலர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 மாத விண்வெளி பயணமாக சென்றுள்ளார். அவர் அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இமயமலை புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது மகனுடன் பேசி உள்ளார். அப்போது அவரிடம் பூமியில் உங்களுக்கு எது மிகவும் பிடிக்கும் என அவரது மகன் அப்துல்லா கேட்டுள்ளார். அதற்கு அவர் மகன், பூமியில் நான் மிகவும் விரும்பும் விஷயம் நீ தான் என்று சுல்தான் அல் நெயாடி குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், விண்வெளியில் நான் விரும்பும் சிறந்த விஷயம் என்ன என்று கேட்கிறீர்கள். அது உங்களுக்கு தெரியும். நாங்கள் இங்கே மைக்ரோ கிராவிட்டி சூழலில் இருக்கிறோம். நீங்கள் விரும்பும் பல விஷயங்களை நாங்கள் இங்கே செய்யலாம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பறப்பது போன்ற அனைத்தையும் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் டுவிட்டரில் வைரலாகி வரும் நிலையில் அதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.