துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 7-ந்தேதி ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தில் 44 ஆயிரம் பேர் பலியானார்கள். இதனால் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு துருக்கிக்கு இந்தியா உதவியது. இதற்காக இந்தியாவுக்கான துருக்கி தூதர் பிராக் சனெல் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசை போலவே இந்திய மக்களும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவினார்கள். உங்கள் மதிப்புமிக்க உதவிக்காக உங்கள் அனைவரையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.