போருக்கு மத்தியில் பிறந்த குழந்தை 
உலகம்

போருக்கு மத்தியில் கீவ் நகரில் பிறந்த பெண் குழந்தை

மெட்ரோ சுரங்கத்தில் பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணிக்கு அங்கேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.

மாலை மலர்

இந்த போருக்கு மத்தியில் சுரங்கத்தில் பதுங்கி இருந்த 23 வயதான பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கீவ் நகரத்தில் உள்ள மெட்ரோ சுரங்கம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த போலீசார் சக மக்களுடன் சேர்ந்து உதவியுள்ளனர். இதில் பெண்ணுக்கு சுரங்கத்திலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர், ஆம்புலன்ஸில் தாயையும், சேயையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரும் அங்கு நலமுடன் இருப்பதாகவும், குழந்தைக்கு மியா என்று பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.