அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் 
உலகம்

கீவ் நகரை மிக எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று புதின் தவறாக நினைத்துவிட்டார்- பென்டகன் தலைவர்

ரஷ்ய படைகளை உக்ரைன் ராணுவம் கடுமையாக தாக்கியதையடுத்து, கீவ் நகரை கைப்பற்றுவதை கைவிட்டுவிட்டார் விளாடிமிர் புதின் என்று பென்டகன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாயிட் ஆஸ்டின் மேலும் கூறியதாவது:-

உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்ற முடியும் என்று புதின் நினைத்தார். அது அவர் செய்த தவறு. தலைநகரைக் கைப்பற்றுவதற்கான தனது முயற்சிகளை புதின் கைவிட்டு இப்போது நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் கவனம் செலுத்துகிறார்.

ரஷ்ய படைகளை உக்ரைன் ராணுவம் கடுமையாக தாக்கியதையடுத்து, கீவ் நகரை கைப்பற்றுவதை கைவிட்டுவிட்டார் விளாடிமிர் புதின்.

SCROLL FOR NEXT