அதிபர் ஆரிப் ஆல்வி 
உலகம்

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்விக்கு 2-வது முறையாக கொரோனா

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பாகிஸ்தான் தற்போது 40-வது இடத்தில் உள்ளது.

மாலை மலர்

லாகூர்:

உலகை அச்சுறுத்தி வரும் பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் அதிபராக இருந்து வரும் ஆரிப் ஆல்விக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஆரிப் ஆல்வி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், எனக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  சிறிய அளவிலாக அறிகுறிகள் தென்பட்டன. அனைவரும் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருங்கள். கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்விக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 71 சதவீதம் அதிகரிப்பு- உலக சுகாதார அமைப்பு