பிரதமர் நப்தாலி பென்னட் 
உலகம்

கொரோனா தொற்று எதிரொலி - இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாட்டு தலைவர்களும் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

ஜெருசலேம்:

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், பிரதமர் நப்தாலி பென்னட் நலமுடன் உள்ளார். அவர் வீட்டிலிருந்தே வேலைகளை தொடருவார் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் ஏப்ரல் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கொரோனா தொற்று எதிரொலியால் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்...உக்ரைன் போர்- அழிவின் விளிம்பில் மரியுபோல் நகரம்