உலகம்

இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல்- காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்

கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள பலகை மீது பிரதமர் மோடிக்கு எதிராக வாசகம் எழுதப்பட்டிருந்தது.இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியா:

காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதில் இந்து கோவில், இந்திய தூதரகம் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு இந்தியா, அமெரிக்கா கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்த நிலையில் கலிபோர்னியாவில் இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் ஹேவார்டில் பகுதியில் விஜய் ஷெராவாசி என்ற இந்து கோவில் உள்ளது.

இந்த கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள பலகை மீது பிரதமர் மோடிக்கு எதிராக வாசகம் எழுதப்பட்டிருந்தது. மேலும் காலிஸ்தான் வாழ்க என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை பார்த்து கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் எக்ஸ் வலை தளத்தில் கூறும்போது, இந்த சம்பவம் இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியாளர்களுக்கு எதிராக விரைவான விசாரணை மற்றும் உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது,

SCROLL FOR NEXT