உலகம்

இங்கிலாந்து பூங்காவில் சிறுமியை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள்

சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. தாக்குதலுக்குள்ளான சிறுமி விரைவில் குணம் அடைய வாழ்த்துவதாக ஒரு பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து லெய்செஸ்டர் ஷையர் பகுதியில் உள்ள ஆஸ்பியின் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுமி ஒருவரை 2 இளம்பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கும் காட்சிகள் டுவிட்டரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டீனோ என்ற பயனரால் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவில், இந்த சம்பவம் எனது தங்கைக்கு நடந்தது என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.

இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. சிறுமியை தாக்கிய பெண்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தாக்குதலுக்குள்ளான சிறுமி விரைவில் குணம் அடைய வாழ்த்துவதாக ஒரு பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT