ஆப்கானிஸ்தானில் 50 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண் 
உலகம்

ஆப்கானிஸ்தானில் 50 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்

ஆப்கானிஸ்தானில் பழங்குடி தலைவர்களின் முயற்சியால் பயங்கரவாதிகள் 50 பேர் சரண் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதத்தில் 500 டேயீஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்தனர். இந்தநிலையில், அந்நாட்டின் நங்கார்ஹர் கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 50 பேர் சரண் அடைந்து உள்ளனர்.  

பழங்குடி தலைவர்களின் முயற்சியால் பயங்கரவாதிகள் சரண் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மீண்டும் டேயீஷ் இயக்கத்தில் சேர முயன்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பழங்குடி தலைவர்கள் பயங்கரவாதிகளை எச்சரித்து உள்ளனர்.