உலகம்

அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது.துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாலை மலர்

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பலியானவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.