பேருந்து விபத்து 
உலகம்

சிரியா: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்துடன் பயணிகள் பேருந்து விபத்து - 35 பேர் பலி

இரு பேருந்துகளில் ஒன்று சிரிய நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தாகும்.

சிரியாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 35 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மத்திய சிரியாவில் உள்ள பால்மைரா மற்றும் அல் சுக்னா நகரங்களுக்கு இடையிலான பாலைவன நெடுஞ்சாலைப் பகுதியில் நேற்று இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்து

சாலையில் எதிரெதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

விபத்துக்குள்ளான இரு பேருந்துகளில் ஒன்று சிரிய நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தாகும். மற்றொன்று பொதுமக்கள் பயணித்த பேருந்தாகும்.

இந்த விபத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சிரியாவின் செய்தி நிறுவனமான சனா தகவல்களின்படி, விபத்து நடந்தவுடன் மீட்புக் குழுவினரும் ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

படுகாயமடைந்தவர்களை விரைவாக மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக பல ராணுவ ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

காயமடைந்தவர்கள் பால்மைரா விமான நிலையத்திலிருந்து வான்வழியாக ஹோம்ஸ் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிரியாவில் தொடரும் விபத்துகள்

சுமார் 14 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டுப் போரின் காரணமாக சிரியாவின் சிவில் உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

சிரியாவின் பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரகால துறை அமைச்சர் ரேத் அல் சலே கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நாட்டில் 2,000 க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்துள்ளன.

கடந்த 2024 டிசம்பரில் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சி கழிவிக்கப்பட்டு, கிளர்ச்சி குழு தலைவரான அகமது அல் ஷரா புதிய அதிபராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.