இந்தியாவை சேர்ந்த 62 வயதான தேபாஷிஸ் கோஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
கோஷ் என்பவர் குடியுரிமை பெறுவதற்கு முன்பு, விமான வசதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து மோசடி செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது.
பல்வேறு அமெரிக்க மாவட்ட நீதிமன்றங்களில் குடியுரிமை ரத்து நடவடிக்கைகளில் 12 நபர்களில் கோஷும் ஒருவர் என அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.
12 நபர்கள் மீதும், பயங்காரவாத குழுவிற்கு ஆதரவு அளித்தல், போர்க்குற்றங்கள் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்துதல் போன்ற குற்றங்களின் கீழ் அவர்களின் மேல் குற்றம் சாட்டப்பட்டனர்.
குடியுரிமை பெற்ற பிறகு தான் குடியிருக்கும் இடத்தை தவறாக கூறி முதலீட்டாளர் நிதியைப் பாதுகாப்பாக வைத்து மோசடியை தொடர்ந்தார். இதுவரை தான் செய்த எந்த ஒரு குற்றத்தையும் எதிலும் சுட்டிக்காட்டவில்லை என்றும் கோஷ் தனது குற்றத்தின் முக்கிய உண்மையை வேண்டுமென்றே தவறாகக் கூறி வருவதாக கருதப்படுகிறது.
அமெரிக்க குடியுரிமை சட்டத்தின் கீழ், ஒரு அமெரிக்கக் குடியுரிமை சட்டவிரோதமாகப் பெறப்பட்டிருந்தாலோ, அல்லது ஒரு முக்கிய உண்மையை மறைத்து அல்லது வேண்டுமென்றே தவறாகக் கூறிப் பெறப்பட்டிருந்தாலோ, அக்குடியுரிமை பெற்ற அமெரிக்கக் குடிமகனின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, குடியுரிமைச் சான்றிதழ் செல்லாததாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
"மோசடி, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்கள் அல்லது பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒருபோதும் அமெரிக்கக் குடிமக்களாக இயல்புப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது," என்று தற்காலிக தலைமை வழக்கறிஞர் டாட் பிளான்ச் கூறினார்.
இது சம்மந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் டிரம்ப் அரசு கடுமையாக எச்சரிக்கிறது.
சட்டவிரோதமாக அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுபவர்களைப் பின்தொடர, சட்டத்தின் கீழ் கிடைக்கும் ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என அமெரிக்க குடியுரிமை கூறி வருகிறது.