உலகம்

உலகளவில் செல்வாக்குமிக்க இந்திய வம்சாவளியினர் பட்டியலில் சுந்தர் பிச்சை முதலிடம்

2வது இடத்தை, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா பிடித்துள்ளார்.

செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளியினர் பட்டியலில் சுந்தர் பிச்சை முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய வம்சாவளியினர் உலகளவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அரசியல், நிர்வாகம், கல்வி, சினிமா என பலவற்றிலும் அவர்கள் தடம் பதித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தென் ஆப்பிரிக்காவின் சமூக செயல்பாட்டாளர் நவநீதம் நவிக்கு வழங்கப்பட்டது.

அந்த வகையில் 2026இல் உலகளவில் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளியினர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் உலகளவில் பெருநிறுவனங்களை தலைமையேற்று நடத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 236 தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தலைமை வகிக்கும் 200 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 15 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் உலகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன.

பட்டியல்

இந்த பட்டியலில் ஆல்பபெட் (கூகுள்) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதலிடம் பிடித்து உலகளவில் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளி நபராக உருவெடுத்துள்ளார். 2வது இடத்தை, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில மைக்ரான் டெக்னாலஜி சிஇஓ சஞ்சய் மெஹ்ரோத்ரா உள்ளார். அவர் நிர்வாகத்தின் கீழ் அந்நிறுவனத்தின் மதிப்பு 1.4 டிரில்லியன் டாலர் ஆக உள்ளது.

சுந்தர் பிச்சை நிர்வாகத்தின் கீழ் ஆல்பபெட் (கூகுள்) மதிப்பு 4.2 டிரில்லியன் டாலர் ஆக உள்ளது. சத்யா நாதெல்லாவின் கீழ் மைக்ரோசாப்ட் நிறுவன மதிப்பு 2.6 டிரில்லியன் டாலர் ஆக உள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆல்பபெட் நிறுவனத்தின் மதிப்பு 98 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்பு 17 சதவீதம் குறைந்துள்ளது.

வளர்ச்சி

இந்திய வம்சாவளி அதிகாரிகள் வழிநடத்தும் 200 நிறுவனங்களின் மொத்த மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 53 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதற்கு செயற்கை நுண்ணறிவு முக்கிய காரணமாகும். 200 நிறுவனங்களில் 103 நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்தோ அல்லது அதனுடன் தொடர்புப்பட்டோ இயங்குகின்றன.

SCROLL FOR NEXT