வடமேற்கு பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள டாங்க் மாவட்டத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த 15 பேரில் 12 ராணுவ வீரர்கள், 2 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு வனத்துறை அரசு அதிகாரி அடங்குவர்.
தீவிரவாதிகள், வெடிபொருட்கள் நிரம்பிய வாகனத்தை பாதுகாப்பு சோதனைச் சாவடியின் சுவரில் மோதி வெடிக்க செய்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதற்குப் பதிலடியாக 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் எனப்படும் உள்ளூர் தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வாகனத்தில் நான்கு தற்கொலை தாக்குதல்வாதிகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் சமீபகாலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.