நிலவின் மேல் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்  
உலகம்

நிலவின் மேல் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 4 டன் ராக்கெட் பகுதி.. தாக்கம் என்ன?

விண்வெளிக் கழிவுகளை அகற்றுவதில் இருக்கும் அலட்சியமே இதற்கு வானியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விண்வெளியில் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாகக் கட்டுப்பாடின்றி சுற்றித் வந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 4 டன் எடையுள்ள ராக்கெட் பகுதி நிலவின் மேற்பரப்பில் மோதியுள்ளது.

2025 ஜனவரியில் Firefly Aerospace விண்கலத்தைச் சுமந்து சென்ற ஸ்பேஸ்எக்ஸ் உடைய Falcon 9 ராக்கெட்டின் பாகமே தற்போது நிலவில் மணிக்கு 8,690 கி.மீ வேகத்தில் மோதியுள்ளது.

மோதல்

ஒரு பள்ளிப் பேருந்தின் அளவிற்குப் பெரியதான இந்த ராக்கெட் பாகம், விண்வெளிப் பாதையிலிருந்து விலகிச் சுமார் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளிக் கழிவாகச் சுற்றி வந்தது.

பூமி நேரப்படி நேற்று நண்பகல் வேளையில், நிலவின் மேற்குக் பகுதியில் அமைந்துள்ள Einstein crater பகுதியில் இது மோதியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதிவேக மோதலால் நிலவின் தூசிகள் காற்றில் எழும்பிப் பரவியுள்ளன.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் லூனார் (நிலவு) செயற்கைக்கோள்கள் இந்த மோதல் நடந்த இடத்தை நிழற்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. புகைப்படங்கள் மூலம் சேதங்களை ஆய்வு செய்யச் சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

காரணம்

ராக்கெட்டில் எஞ்சியிருந்த எரிபொருள் முழுமையாக வெளியேற்றப்பட்டதால், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனது.

சூரிய கதிர்வீச்சு மற்றும் ஈர்ப்பு விசையின் காரணமாகவே இது நிலவை நோக்கிய பாதையில் திரும்பியதாக ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த மோதலால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்ற போதிலும், விண்வெளிக் கழிவுகளை அகற்றுவதில் இருக்கும் அலட்சியமே இதற்கு வானியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுபோன்ற திட்டமிடப்படாத சம்பவங்களை தடுப்பது குறித்து நாசாவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.