உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளியில் பிரமாண்டமான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தரவு மையத்தை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்தது.
இந்தநிலையில் விண்வெளியில் தரவு மையங்களை உருவாக்குவதற்காக 10 லட்சம் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.
அமெரிக்காவின் தேசிய தகவல் தொடர்பு ஆணையம் அளித்துள்ள இந்த அனுமதியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2033-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஒரு விண்வெளி நிலையத்தையாவது நிலைநிறுத்த வேண்டும்.
2040-ம் ஆண்டு வரை படிப்படியாக மேலும் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டார்மைண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், விண்வெளியில் கிடைக்கும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி, ஏ.ஐ. தரவு மையங்கள் இயக்கப்படும்.
அவை பூமிக்குத் தேவையான மிகப்பெரிய அளவிலான தரவுகளை விண்வெளியிலிருந்தே செயலாக்கம் செய்து அனுப்பும்.