உலகம்

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 11 பேர் உயிரிழப்பு

பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள என்1 நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் ட்ராம்ப்ஸ்பர்க்கிற்கு வடக்கே சுமார் 24 கி.மீ தொலைவில், ஈடன்பர்க் செல்லும் வழியில் நேற்று இரவு 9.30 மணியளவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில், பேருந்திற்கு வெளியே 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டுளதாக துறை செய்தித் தொடர்பாளர் மோண்ட்லி மவாம்பி கூறினார்.

மேலும், வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்புக் குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.