உலகம்

பூமியை தாக்கிய சக்திவாய்ந்த சூரிய புயல்.. ரேடியோ சிக்னல்கள் பாதிப்பு

'ஆரோரா' எனப்படும் விசித்திரமான துருவ ஒளிகள் தோன்றின.

பூமியை சக்திவாய்ந்த சூரியப் புயல் தாக்கியது.

சூரியனில் உள்ள 'சன்ஸ்பாட் 4549' என்ற பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு காரணமாக, நேற்று பூமியின் காந்தப்புலத்தை சக்திவாய்ந்த சூரியப் புயல் தாக்கியது.

சூரியப் புயல்

விண்வெளியில் இருந்து விநாடிக்கு 900 கி.மீ. வேகத்தில் வந்த சூரியப் புயல் பூமியை மோதின.

இந்த சூரியப் புயல் காரணமாக, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதி களில் வானத்தில் 'ஆரோரா' எனப்படும் விசித்திரமான துருவ ஒளிகள் தோன்றின. இது பார்க்க மிகவும் அழகானதாக இருந்தது.

பாதிப்பு

இந்த புயல் பூமிக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் சூரியப் புயலின் தாக்கத்தால் நேற்று சில பகுதிகளில் ரேடியோ சிக்னல்கள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.

மேலும், செயற்கைக்கோள் தொடர்புகள் மற்றும் மின்சார வினியோகக் கட்டமைப்புகளில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன.

விண்வெளியில் சுழலும் செயற்கைக் கோள் கூட்டமைப்பில் சிறிய அளவில் தொழில்நுட்ப நெருக்கடிகளும் தற்காலிக தடைகளும் ஏற்பட்டது. சூரிய புயலின் தாக்கத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT