பிரான்சில் ஸ்கை டைவிங் செய்ய புறப்பட்ட11 பேர் சென்ற சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர்.
பிரான்ஸ் நாட்டின் நான்சி நகருக்கு அருகே உள்ள டாம்ப்லெய்ன் நகரில் இன்று இந்த விபத்து நடந்துள்ளது.
விமானத்தில் முதல் முதலில் ஸ்கை டைவிங் செய்ய சென்ற 5 நர்ஸ்கள், அவர்களுக்கு ஸ்கை டைவிங் செய்ய வழிகாட்ட வந்த பயிற்றுநர்கள், ஒரு விமானி என 11 பேர் இருந்துள்ளனர்.
முதல் முதலில் ஸ்கை டைவிங் செய்ய சென்ற ஐவரும் தொழில்முறை நர்ஸ்கள் என தெரியவந்துள்ளது.
இன்று காலை 11 மணியளவில் விமானம் டாம்ப்லெய்ன் பகுதியில் வீடுகள் நிறைந்த பகுதிக்கு அருகே உள்ள சாலை அருகில் புல்வெளி பரப்பில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது.
அந்த விமானம் ஸ்கை டைவிங் உள்ளிட்டவற்றுக்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் பிலாடஸ் வகையை சேர்ந்த விமானம் ஆகும்
அந்த விமானம் அவர்களை அழைத்துச் சென்ற ஸ்கை டைவிங் கிளப்பிறகு சொந்தமானது.
விமானம் செங்குத்தாக கீழே விழுந்து நொறுங்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. குடியிருப்புகளுக்கு அருகில் விபத்து நேர்ந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக தரையில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.