உலகம்

முட்டை என நினைத்து 3 கோல்ஃப் பந்துகளை விழுங்கிய 6 அடி பாம்பு- வைரல் வீடியோ

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 3 கோல்ப் பந்துகளை ஆறு அடி நீளமுள்ள பாம்பு ஒன்று விழுங்கியது.

அமெரிக்காவில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று உணவு என்று நினைத்து மூன்று கோல்ஃப் பந்துகளை விழுங்கி நகர முடியாமல் கிடந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீட்டிற்குள் இரவு நேரத்தில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது.

இதையடுத்து அந்த பாம்பு, வீட்டில் இருந்த மூன்று கோல்ஃப் பந்துகளை முட்டை என்று தவறுதலாக நினைத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளது.

கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பு

இதைத்தொடர்ந்து பந்துகளை விழுங்கிய பாம்பு, அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் அங்கேயே கிடந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அதனை மீட்டு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள், பாம்பிற்கு மயக்க மருந்தினை செலுத்தி பந்துகளை அகற்ற முயன்றனர்.

அப்போது அவர்கள், பாம்பின் வயிற்றில் சிக்கியிருந்த மூன்று பந்துகளையும், ஒவ்வொன்றாக மெதுவாக வெளியே எடுத்தனர்.

பத்திரமாக மீட்கப்பட்ட பாம்பு

இந்த நிகழ்வு குறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், இது நிச்சயமாக ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்று குறிப்பிட்டனர்.

இதையடுத்து பாம்பின் உடல்நிலை சீரானதிற்கு பிறகு, வனவிலங்கு மீட்புப் படையினர், அதனை பத்திரமாக காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.

SCROLL FOR NEXT