உலகம்

வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் விளக்ம் அளித்தார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தை அடுத்து அதிபர் டிரம்பை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

டிரம்ப் நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் விளக்ம் அளித்தார்.

அவர் கூறியதாவது:-

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் யாருக்கும் காயமில்லை. தாக்குதல் நடத்தியவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளால் நாங்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டோம்.

துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்த நிலையில் பாதுகாப்பு படையினர் துணிச்சலுடன் துரிதமாக செயல்பட்டனர்.

என்னைக் கொல்ல நடந்த முயற்சி இது முதல்முறையல்ல, 2 ஆண்டுகளுக்கு முன்பும் என்னை கொல்ல முயற்சி நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.