செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐயின் அலுவலகங்கள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இயங்கி வருகிறது.
இதற்கிடையே அந்நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றில் கூட்ட அறையில் அதிநவீன ஒலிப்பதிவுக் கருவி ஒன்று ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததை நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக எப்.பி.ஐயிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அங்கு பணியாற்றிய ஊழியரான சவுதி அரேபியாவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அவர் நிர்வாகிகள் கூடும் அறை ஒன்றில், ஒரு கருவியை அங்கிருந்த தொலைக்காட்சியில் பொருத்தி இருக்கிறார். அங்கு நடைபெறும் கூட்டங்களில் அவர் பங்கேற்க அனுமதி இல்லாத நிலையில் அந்த அறைக்கு அருகே பலமுறை வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது.
இதையடுத்து அப்துல் ரகுமான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும், அவர் மூலக் குறியீடு அல்லது வாடிக்கையாளர் தரவு ஆகியவற்றை முறையற்ற வகையில் அணுகியதற்கோ அல்லது வெளியே கடத்தியதற்கோ எந்த அறிகுறியும் இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.