சவுதி அரேபியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அந்நாட்டின் ராஸ் டானுரா பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது.
மேற்காசியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு முனையங்களில் ஒன்று ராஸ் டானுராவில் அமைந்துள்ளது. அது அராம்கோ நிறுவனத்தால் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 6 மணியளவில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மர்மமான முறையில் விபத்தில் சிக்கியுள்ளது.
இதில் ஹெலிகாப்டரில் இருந்த 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சவுதி நாட்டை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணமா குறித்து விசாரணை நடைபெறு வருகிறது. சவுதி எரிசக்தி அமைச்சகம், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் குவைத், பஹ்ரைன் மீது இன்று ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் சவுதியின் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் முனைய பகுதியில் நடந்த இந்த விபத்து அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.