உலகம்

அமெரிக்காவின் அட்லாண்டாவில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு

சர்தார் வல்லபாய் பட்டேலின் மார்பளவுச் சிலையை எஸ்.ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த ஜி20 அமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

பிறந்தநாள்

இந்தநிலையில் அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதரகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை யொட்டி நடந்த தேசிய ஒற்றுமை தின விழாவில் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார்.

அப்போது சர்தார் வல்லபாய் பட்டேலின் மார்பளவுச் சிலையை எஸ்.ஜெய்சங்கர் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பங்கேற்ற இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.

இதுதொடர்பாக ஜெய் சங்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

தேசிய ஒற்றுமை தினத்தில் அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையைத் திறந்து வைத்தது பெருமைக்குரிய விஷயம்.

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டிற்காக சர்தார் பட்டேல் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வை, தலைமைத்துவம் மற்றும் அவர் ஆற்றிய விலை மதிப்பற்ற பங்களிப்பை நமக்கு நினைவூட்டுகிறது.

இந்திய வம்சாவளியினர் அடைந்துள்ள சாதனைகள், அவர்கள் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT