ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலுக்குப் பதிலாக உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் நேற்று இரவு மத்திய ரஷியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகமான நகரம் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவில் பொதுமக்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தது. உக்ரைன் ஏவிய 456 டிரோன்களை தாக்கி அழித்ததாக ரஷியா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் கிளைடு குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஜபோரிஸ்சியா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷியா படைகள் பயன்படுத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வடகொரியாவில் இருந்து சப்ளை செய்யப்பட்டதாகும். வடகொரியாவிடம் இருந்து ரஷியா கூடுதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பெற்றுள்ளது. அத்துடன் மேலும் அதிகமான வடகொரிய வீரர்களை குவிக்க தயாராகி வருகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார.
ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே இரண்டு வருடத்திற்கு முன்னதாக, மூலோபாயக் கூட்டாண்மை ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், இரண்டு நாடுகளில் ஏதாவது ஒரு நாடு போரை எதிர்கொண்டால், ஒரு நாட்்டிற்கு மற்றொரு நாட்டிற்கு உதவி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உக்ரைனுக்கு எதிராக போரிடுவதற்கான ஆயிரக்கணக்கான வீரர்களை ரஷியா படைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று ரஷியாவின் டாடர்ஸ்டான் எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம் ஆகும். இங்கு ஏராளமான மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. ரஷியாவின் பதிலடி தாக்குதலுக்கான இந்த பகுதியை இலக்காக கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ரஷியாவும் பதில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.