பெய்ஜிங்கில் நடைபெற்ற 2026 உலக ரோபோ மாநாட்டில், ரோபோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டது.
மாநாட்டில் பங்கேற்ற ரோபோ அதன் தானியங்கி கட்டுப்பாட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விசித்திரமான மற்றும் குழப்பமான காட்சியை வெளிப்படுத்தியது. இந்த சம்பவம் அங்கு பேசுபொருளானது.
நவீன மனித உருவ இயந்திரங்களின் திறன்களை வெளிக்காட்டும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு செயல்விளக்கத்தில் அந்த ரோபோ பங்கேற்றபோது, திடீரென அதன் கட்டுப்பாட்டை இழந்தது.
அதன் ரிமோட் கண்ட்ரோல் இணைப்பு செயலிழந்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து, அந்த ரோபோ மல்லாக்க விழுந்து, தனது கைகளையும் கால்களையும் மூர்க்கமாக அசைக்கத் தொடங்கியது.
அதன் பதட்டமான அசைவுகள், மனிதர்களுக்கு ஏற்படும் வலிப்பு அல்லது ஒரு குழந்தை அடம்பிடிப்பது போல இருந்ததால், பார்வையாளர்கள் திகைத்துப்போயும் வேடிக்கையாகவும் உணர்ந்தனர். ரோபோவின் மனித இயக்குநர்கள் தலையிட விரைந்தனர்.
இருந்தும், நிலைமை மேலும் அசாதாரணமானது. பல பொறியாளர்கள் அந்த ரோபோவை கட்டுப்படுத்தி, மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற முயற்சிப்பதை காண முடிந்தது, ஆனால் அதை உடனடியாக கட்டுப்படுத்த அவர்கள் சிரமப்படுவதாகத் தோன்றியது.
அருகில் இருந்த மக்கள் அந்த எதிர்பாராத காட்சியை பார்த்துக் கொண்டிருக்க, அந்த ரோபோ- கண்காட்சி தளத்தில் மீண்டும் மீண்டும் தவிப்பதை அந்த சம்பவத்தின் வீடியோக்கள் காட்டுகின்றன.
அந்த சம்பவம், ரோபோ முதலில் காட்சிப்படுத்த நோக்கமாக கொண்டிருந்த தொழில்நுட்பத்தையே மறைத்து, அந்த நிகழ்வின் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் ஒன்றாக மாறியது.
இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிிரப்பட்டத. இது குறித்து ஒரு பயனர், "அதை அழுத்தி பிடிப்பதுதான் அவர்களின் தீர்வா? அதை தடுத்து நிறுத்த அவர்களிடம் ஒரு பொத்தான் கூட இல்லையா?? சரி... அது கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை," என்று எழுதியிருந்தார்.
மற்றொருவர், "இது அடம்பிடிக்கும் ஒரு சிறு குழந்தையை போலத் தெரிகிறது" என்றார்.
மூன்றாவது நபர், "மேலும், அவர்களால் அதை உடனடியாக ஆஃப் செய்ய முடியாது போலத் தெரிகிறது. அது என்ன விஷயம்? இது மிகவும், மிகவும் மோசமான அறிகுறி," என்று கருத்து தெரிவித்தார்.