உலகம்

புலிட்சர் பரிசை வென்ற இரு இந்திய செய்தியாளர்கள்

ஜப்​பானின் நடாலி ஒபிகோ பியர்​சனுக்கும் புலிட்​சர் விருது அறிவிக்​கப்​பட்டது.

அமெரிக்​கா​வின் கொலம்​பியா பல்​கலைக்​கழகம் சார்​பில் ஒவ்வொரு ஆண்​டும் புலிட்​சர் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்நிலையில், இதழியல், இலக்​கி​யம் உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு சமீபத்தில் புலிட்​சர் விருது அறிவிக்கப்பட்டது. இதில் இந்​திய செய்​தி​யாளர்​கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோர் உள்​ளனர்.

மேலும் ஜப்​பானைச் சேர்ந்த நடாலி ஒபிகோ பியர்​சனுக்கும் புலிட்​சர் விருது அறிவிக்​கப்​பட்டுள்​ளது.

ஆனந்த் ஆர்.கே. மகா​ராஷ்டிராவின் மும்​பையைச் சேர்ந்தவர், சுபர்ணா சர்மா டெல்லியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.