இங்கிலாந்தின் சாமர்செட் பகுதியில் அரிய வகை வரிக்குதிரை போன்ற கோடுகளைக் கொண்ட தேனீ முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சாமர்செட் பகுதியில் தேனீ வளர்ப்போர் சங்கம் மற்றும் தி சாமர்செட் பீ கம்பெனி ஆகியவை தேனீக்களைப் பாதுகாப்பதிலும், தூய தேன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சாமர்செட்டில் உள்ள ஸ்டியர்ட் மார்ஷஸ் சதுப்பு நிலப் பகுதியில், வரிக்குதிரை போன்ற தனித்துவமான கோடுகளைக் கொண்ட அரிய வகைத் தேனீ முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது விரல் நகத்தின் அளவே உள்ள சிறிய தனித்து வாழும் தேனீ இனத்தின் வகையைச் சேர்ந்தது.
இவை கடலோர உவர் சதுப்பு நிலங்களில் வளரும். சீ ஆஸ்டர் எனும் மலர்களை உணவிற்காகச் சார்ந்து வாழ்கின்றன.
விவசாய நிலங்களை மீண்டும் இயற்கையான சதுப்பு நிலங்களாக மாற்றியமைத்ததன் விளைவாக இந்த அரிய தேனீ இனம் அங்கு வருகை புரியத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.