உலகம்

கியூபெக்கில் 50 கோடி ஆண்டுகள் பழமையான உயிரினத்தின் படிவம்: 65 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஆய்வு..!

கடந்த 1962ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உயிரினத்தை தொல்லுயிரியல் ஆய்வாளர்கள் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கிழக்கு கனடாவில் அதிகளவில் பிரெஞ்சு மொழி பேசும் மிகப் பழமையான மாகாணமாக கியூபெக் நகரம் இருந்து வருகிறது.

இங்கு கடந்த 1962-ம் ஆண்டு பாறை அமைப்புகளை ஆய்வு செய்து கொண்டிருந்த ஒரு புவியியலாளர், கருங்கல் பாறை ஒன்றிலிருந்து கட்டைவிரல் அளவுள்ள ஓர் உயிரினத்தை வெளியே எடுத்து வாஷிங்டனுக்கு அனுப்பினார்.

காலப்போக்கில் மறக்கப்பட்ட இந்த ஆய்வை சுமார் 60 ஆண்டுகளுக்கு பின்பு தொல்லுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது மீண்டும் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பரிணாம வரலாற்றில் 50 கோடி ஆண்டுகள் பழமையான கட்டைவிரல் அளவுள்ள உயிரினம், சிலந்திகள் மற்றும் தேள்களோடு தொடர்புடையதாக ஆய்வு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

எல்க்ட்ரான் மைக்ரோஸ்கோப்பை பயன்படுத்தி அந்த மாதிரியை ஆய்வு செய்தபோது, புதைபடிவத்தில் கால்சியம் பாஸ்பேட் மற்றும் கார்பன் நிறைந்த தடயங்களை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர்.

பழைய சேகரிப்புகளை மீண்டும் ஆராய்வது மதிப்புமிக்கது என்பதை இந்த கண்டுபிடிப்பு காட்டுகிறது. இந்த புதைபடிவம் 1962-ம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்டு, ஸ்மித்சோனொயனின் சேகரிப்புகளில் பாதுகாக்கப்பட்டு இருந்தது.

இந்த விலங்கு கோர்கோரானிட்கள் எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்தது. தொல்லுயிரியலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றை இது எடுத்துக்காட்டுகிறது” என்று ஜெர்மனியின் கார்ல்ஸ்ரூ தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த ஜூலியன் கிம்மிங் பத்திரிக்கை கூறியுள்ளது.