அமெரிக்காவை சேர்ந்த முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் (Qualcomm), இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
குவால்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ அமோன், நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஏற்கனவே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* அடிப்படை இழப்பீடாக இரண்டு வாரங்களுக்கான மொத்த சம்பளம்.
* நிறுவனத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக இரண்டு வாரச் சம்பளம்.
* முழுமையடையாத பணிக்காலத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இழப்பீடு.
* மருத்துவக் காப்பீட்டுக்கான மொத்தத் தொகை.
* குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிவிலகல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் கூடுதலாக ஒரு மாதச் சம்பளம்.
சில ஊழியர்களின் தகவலின்படி, இரண்டு நாட்களுக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் கூடுதல் ஒரு மாதச் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த நிபந்தனைகள் தனிப்பட்ட ஒப்பந்தத்தைப் பொறுத்து மாறுபடலாம்.
மின்னணுப் பொருட்களுக்கான நுகர்வோரின் தேவை குறைவு மற்றும் அதிகரித்து வரும் மெமரி சிப் விலைகள் ஆகியவை ஸ்மார்ட்போன் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், ஆப்பிள் தயாரிப்புகளின் வருவாயில் எதிர்பார்த்ததை விட வேகமான சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு.
இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு (AI), டேட்டா சென்டர் மற்றும் வாகனத் தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளில் குவால்காம் முதலீடுகளை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் சுமார் 1,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் வெளியாகின. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிடக் குறைவாக இருக்கலாம். பாதிக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.