உலகம்

முன்னாள் ஆசிரியருக்கு சாரதியாக மாறிய அதிபர் புதின்

ரஷியாவில் கடந்த 9-ம் தேதி வெற்றி தினவிழா கொண்டாட்டம் நடந்தது.

ரஷியாவில் கடந்த 9-ம் தேதி வெற்றி தினவிழா கொண்டாட்டங்கள் நடந்தன. இதில் அரசு சார்பில் முக்கிய விருந்தினர்களுக்கு கிரெம்ளின் மாளிகையில் விருந்து நடைபெற்றது.

இந்நிலையில், வெற்றி தினவிழாவில் கலந்துகொள்ள வந்த 92 வயதான வேரா குரேவிச் என்ற ஆசிரியரை அதிபர் புதின் ஓட்டலில் இருந்து காரில் அமரவைத்து தானே அந்தக் காரை ஓட்டியும் வந்தார்.

அதிபர் புதின் தனது முன்னாள் ஆசிரியரை அர்பாத் ஹோட்டலில் இருந்து பிக்கப் செய்து, கிரெம்ளினில் இரவு உணவிற்கு அழைத்துச் சென்றார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மதிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு அதிபர் புதின் முக்கியத்துவம் அளிப்பதை இது காட்டுகிறது.

வேரா குரேவிச் அதிபர் புதினுக்கு ஜெர்மன் மொழி கற்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.