சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு சார்பில் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ரஷிய அதிபர் புதின் கலந்துகொண்டு பேசினார். அப்போதுஅவர் கூறியதாவது:
இந்தியா தனது நாட்டு நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கிறது.
ரஷியாவுடன் உள்ள உறவுகள் காரணமாக அழுத்தங்களைச் சந்தித்தாலும் இந்தியா தொடர்ந்து தனது நாட்டு நலனைக் கருத்தில் கொண்டுதான் செயல்படும்.
இந்தியா எப்போதும் இறையாண்மைமிக்க நாடாக செயல்படுகிறது.
அதற்குக் காலத்துக்கு ஏற்ற தனது தேவைகள் மற்றும் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் உள்ளது.
அதற்கு தடைகள் விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், அது பிரதமர் மோடி தலைமையின் கீழ் பூமராங் போல் திரும்பும்.
இந்தியாவுடனான எங்கள் ஒத்துழைப்பு, நாங்கள் மற்ற நாடுகளுடன் கொண்டிருப்பது போல் எப்போதும் இருக்கும். இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரஷியா தொடர்ந்து செயல்படும் என தெரிவித்தார்.