வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த நிலையில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.
வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பாரளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையே யூனுஸ் தலைமையில் தற்போதைய இடைக்கால அரசாங்கத்தின் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த டிசம்பரில் மாணவர் அமைப்பு தலைவர் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள முகமது யூனுஸின் இல்லத்தை நோக்கி நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றனர்.
போராட்டக்காரர்கள் தடையை மீறி முன்னேற முயன்றபோது, அவர்களைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், நீர் பீய்ச்சி அடித்தும் தடுத்தனர்.
முகமது யூனுஸின் இல்லத்தைச் சுற்றியும், டாக்காவின் முக்கியப் பகுதிகளிலும் காவல்துறை மற்றும் ராணுவ பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Bangladesh | Members of the Inquilab platform hold a protest in Dhaka, demanding justice in the killing of Osman Hadi, a key leader in the protests against Sheikh Hasina, who died on 18 December. The protestors are marching toward the police and attempting to reach… pic.twitter.com/V9hk0RkuIG