மரியம் டாகா  
உலகம்

காசா அவலத்தை உலகுக்கு காட்டும் முயற்சியில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு மதிப்புமிக்க விருது

தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செய்தி சேகரித்த அசோசியேட்டட் பிரஸ்-ஐ சேர்ந்த மூன்று சுயாதீனப் பத்திரிகையாளர்களுக்கு மதிப்புமிக்க ரோரி பெக் விருது வழங்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை சேர்ந்த அசோசியேட்டட் பிரஸ் புகைப்படப் பத்திரிகையாளர்களான அப்துல் கரீம் ஹனா மற்றும் ஜிஹாத் அல்ஷராபி, மற்றும் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட மரியம் டாகா ஆகியோருக்கு ரோரி பெக் அறக்கட்டளையின் மதிப்புமிக்க 'சிறந்த சுயாதீனப் பத்திரிகையாளர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

காசா அவலம்

அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கிய காசா போரின் கொடூரத்தை இந்த மூவர் உலகிற்குக் கொண்டு வந்தனர்.

இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் நிவாரணப் பணிகளை தடுத்த முற்றுகையால் ஏற்பட்ட பேரழிவுகரமான மனிதாபிமான நெருக்கடியையும், பெருமளவிலான இடப்பெயர்ச்சியையும் அவர்கள் கேமராவில் பதிவு செய்தனர்.

இம்மூவரின் மரியா டாகா, ஆகஸ்ட் 2025ல் தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

விருது வழங்கல்

அந்த மூவருடன் பணியாற்றிய மற்றொரு அசோசியேட்டட் பிரஸ் புகைப்பட பத்திரிகையாளர் பாத்திமா ஷ்பைர், அவர்கள் சார்பாக விருதைப் பெற்றுக்கொண்டார்.

2024ல் தனது குடும்பத்துடன் காசாவை விட்டு வெளியேறிய பாத்திமா, அவர்களது புகைப்படங்கள் காசா மக்களின் துன்பத்தையும் மனிதநேயத்தையும் ஒருங்கே படம்பிடித்துக் காட்டியதாகக் கூறினார்.

SCROLL FOR NEXT