உலகம்

Chile Earthquake | திடீரென குலுங்கிய கட்டிங்கள்... சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 6.2-ஆக பதிவு!

பொது மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.பூமியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

சிலியின் வடக்குப் பகுதியில் உள்ள வல்லெனார் நகரத்திற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 அளவில் பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் குறித்து வெளியான முதற்கட்ட தகவல்களில், யுடிசி நேரப்படி 13:39 மணி (இந்திய நேரப்படி இரவு 7.09 மணி) அளவில் வல்லெனாரில் இருந்து சுமார் 85 கிலோமீட்டர்கள் மேற்கில் ஏற்பட்டது.

நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்பரப்பில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் கருதப்படுகிறது. நிலநடுக்கத்தால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

சிலி போன்ற நிலநடுக்க பகுதிகளில் இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.