பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியுள்ளது.
பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவின் மத்திய பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்த தகவலின்படி, உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 7.09 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜூனின் நகரில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில், ஆண்டிஸ் மலைப் பகுதியில், பூமிக்கு அடியில் 108 கிலோ மீட்டர் ஆழத்தில் இதன் மையம் இருந்தது.
நிலநடுக்கத்தை உணர்ந்த தலைநகர் லிமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அச்சத்தில் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதுவரை உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என பெரு புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரு நாடு, பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள "நெருப்பு வளையம்" பகுதியில் அமைந்துள்ளது. உலகின் பெரும்பாலான நிலநடுக்கங்கள் இந்தப் பகுதியில்தான் ஏற்படுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெருவில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2 பேர் காயமடைந்தனர். பல வீடுகள், சுகாதார மையங்கள், பள்ளிகள் சேதமடைந்தன.
கடந்த ஜூலை மாதம் ஜூனின் பகுதியில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.