இந்தோனேசியா நாட்டின் மொலுக்கா கடல் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்எதிரொலியால், வடக்கு சுலவேசி பகுதியில் கட்டடங்கள் இடிந்தன. மேலும், சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின.
நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி அலைகள் உருவாகியுள்ளது. இதனால், மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
2004-ல் இந்தோனேசியா நிலநடுக்கத்தால் உருவான சுனாமி அலைகளால் இந்தியா வரை பாதிப்பு ஏற்பட்டது.