உலகம்

தொழில்நுட்பக் கோளாறால் போப் ஆண்டவர் பயணிக்க இருந்த விமானம் ரத்து

ஸ்பெயின் பயணத்தை முடித்த போப் லியோ ரோம் திரும்புவதற்காக விமானத்தில் புறப்பட இருந்தார்.

வாடிகன் தலைவரான போப் ஆண்டவர் ஸ்பெயினில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தனது பயணத்தை முடித்த போப், நேற்று ரோம் திரும்புவதற்காக விமானத்தில் புறப்பட இருந்தார்.

அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் திட்டமிட்டபடி புறப்பட முடியவில்லை. இதனால் அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப் தனது சொந்த பால்கன் ஜெட் விமானத்தை போப் ஆண்டவருக்கு வழங்க முன்வந்தார். போப் அந்த அரச விமானத்தில் ஏறி ரோம் சென்றடைந்தார்.

போப் ஆண்டவர் பயணம் செய்ய இருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.