உலகம்

ஜெபமாலையால் தாக்கப்பட்ட போப் லியோ - வீடியோ வைரல்

தென் அமெரிக்காவிற்கு 12 நாள் பயணம் மேற்கொண்டிருந்தார்.

போப் லியோவை நோக்கி வீசப்பட்ட ஜபமாலை அவரின் கண்ணில் பட்ட சமபவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

போப் லியோ தென் அமெரிக்காவிற்கு 12 நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். பயண நிறைவாக நேற்று பெரு நாட்டில் நடைபெற்ற பிரியாவிடை பிரார்த்தனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

சாலைவளம்

லிமாவில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களை போப் ஆண்டவர் போப் மொபைல் எனப்படும் தனது திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி சந்தித்தார்.

கூட்டத்தில் இருந்த ஒரு பக்தர் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக அவரை நோக்கி ஒரு பொருளை எறிந்தார்.

ஜபமாலை

போப்பால் அதைப் பிடிக்க முடியாததால், அது நேராக அவரது கண்ணை தாக்கியது. இதனால், அவர் உடனடியாகத் தன் கண்ணைத் தேய்த்துக்கொண்டார்.

அந்த பொருள் ஒரு ஜபமாலை என பின்னர் தெரியவந்தது. இந்தச் சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் போப் காயமடைந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. தனது பிரசங்கத்தில், பெரு நாட்டு மக்களுக்கு அவர்களின் விருந்தோம்பலுக்காக அவர் நன்றி தெரிவித்தார்.

71 வயதான போப் லியோ, பொது நிகழ்வுகளின் போது பக்தர்கள் அவர் மீது வீசும் பொருட்களை லாவகமாகப் பிடிப்பதில் ஆர்வம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT