பிரான்ஸ் நாட்டின் எவியன் நகரில் ஜி7 உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுடன் சர்வதேச ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ள உள்ளார்.
இந்த மாநாட்டில் ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரான்சின் பிரத்யேக அழைப்பின் பேரில் இந்தியா உள்ளிட்ட பல நட்பு நாடுகளின் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
பிரான்சின் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மனியின் ஓலாஃப் ஷோல்ஸ், இத்தாலியின் ஜார்ஜியா மெலோனி, ஜப்பானின் சனாய் தகாய்ச்சி, கனடாவின் மார்க் கார்னி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியாவின் நரேந்திர மோடி, உக்ரைனின் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரேசிலின் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.