உலகம்

PM Modi | ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது... பிரதமர் மோடிக்கு புதிய அஙகீகாரம்!

பிரதமர் மோடிக்கு கிடைக்கும் 31வது சர்வதேச கௌரவம் ஆகும்.

ஸ்வீடன் ஒரு அரசாங்க தலைவருக்கு வழங்கும் மிக உயர்ந்த கௌரவமான 'ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார்' விருதை, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளது.

இது பிரதமர் மோடிக்கு கிடைக்கும் 31வது சர்வதேச கௌரவம் ஆகும். இந்த விருது, ஒரு அரசாங்க தலைவருக்கு வழங்கப்படக்கூடிய மிக உயர்ந்த கௌரவமாகும்.

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, "ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்" 1748-இல் நிறுவப்பட்டது. இது, குறிப்பாக பொது செயல்பாடுகளில், ஸ்வீடனுக்காகவோ அல்லது ஸ்வீடன் நலன்களுக்காகவோ செய்யப்படும் தனிப்பட்ட முயற்சிகளையும், அத்துடன் பொது பணிகள் மற்றும் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதையும் அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

மோடி இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஸ்வீடன் வந்தடைந்தார். கோதென்பர்க் விமான நிலையத்தில் அவரை அவரது ஸ்வீடன் நாட்டு சகா உல்ஃப் கிறிஸ்டர்சன் வரவேற்றார்.