பிரான்ஸ் நாட்டின் எவியன் லெஸ் பெய்ன்ஸ் நகரில், இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரான்ஸ் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சர்வதேச பொருளாதார மீட்சி, உலகளாவிய ஒற்றுமை மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) பொறுப்பான பயன்பாடு ஆகியவை முக்கிய கருப்பொருள்களாக விவாதிக்கப்படுகின்றன.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார்.
மாநாட்டின் இடையே பிரதமர் மோடியை சந்தித்த அதிபர் டிரம்ப் அவருடன் கைகுலுக்கி மகிழ்ந்தார்.
இந்த மாநாட்டில் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் சிக்கல்களை அகற்றும் திட்டங்கள் குறித்து அதிபர் டிரம்ப் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.