உலகம்

பிரதமர் மோடியுடன் இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி சந்திப்பு

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர், அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்டை சந்தித்துப் பேசினார். அப்போது பயங்கரவாதம் , பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் சந்தித்துப் பேசினார். மேலும், எக்ஸ் வலைதளம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், எலான் மஸ்க் உடனான சந்திப்பை தொடர்ந்து, இந்திய வம்சாவளி தொழலதிபரான விவேக் ராமசாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.