உலகம்

ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் சிறிது நேரம் உரையாடினார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரான்ஸ் பயணம் மற்றும் ஜி7 குறித்து பிரதமர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "ஜி7 உச்சி மாநாட்டுக்காக பிரான்சின் எவியான் நகரை வந்தடைந்தேன். உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கும், உலகளாவிய பிரச்னைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்று உலகத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் சிறிது நேரம் உரையாடினார்.

ஜி7 மாநாடு என்பது உலகப் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள ஏழு நாடுகளின் தலைவர்கள், ஆண்டுதோறும் கூடி சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் ஒரு அமைப்பாகும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவை இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன.

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் ஈவியன் நகரில் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.