உலகம்

PM Modi | இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து சென்றடைந்தார்

பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

ஐரோப்பாவில் இந்தியாவின் மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தனது பல நாடுகளுக்கான ராஜதந்திர சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்துக்குசென்றடைந்தார்.

பிரதமரின் வருகையை அறிவித்து, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், "குட்ஈவோன்ட் நெதர்லாந்து! பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்துக்கு வருகை தந்துள்ளார். இந்த பயணம், பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியா-நெதர்லாந்து கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய இந்திய புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடவும் ஒரு வாய்ப்பை வழங்கும்."

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், "ஆம்ஸ்டர்டாமில் தரையிறங்கினேன். இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்துள்ள நேரத்தில் இந்த நெதர்லாந்து பயணம் நடைபெறுகிறது. இது செமிகண்டக்டர்கள், நீர், பசுமை எரிசக்தி மற்றும் பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

"நான் பிரதமர் டிக் ஸ்கூஃபுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரையும் சந்திப்பேன். மேலும், மே 16 ஆம் தேதி காலையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியின் போது சமூகத்தினரிடையே உரையாற்றுவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்று பிரதமர் மேலும் கூறினார்.